ஆன்மீக சேவா அறக்கட்டளை திருவண்ணாமலை ஈழத்துசித்தர்
Do you like this story?
உலக சமுதாய ஆன்மீக சேவா அறக்கட்டளை
(Registered as per Indian Trust Act 138)
இன்பமே சூழ்க ! எல்லோரு வாழ்க !!
26 - 08 - 2006
அண்ணாமலை நேசரான திரு மயில்வாகனம் ஆசிரியர் அவர்கள் ஒரு ஈழத் தமிழர்.
இவர் ஈழத்தின் வன்னிப்பெருநிலப்பரப்பில் பல அரச பாடசாலைகளில் உதவி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும், நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.
இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பல்வேறு உயர் நிலைகளில் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றனர்.
சீனா காட்மண்டு நேபாளம் ஊடான
இவரது திருக்கைலாயப் பயண வீடியோவில்
இருந்து ஒரு சிறிய பகுதி !
இலங்கையில் PostOffice - போஸ் மாஸ்ட்டராகவும், கூட்டுறவு சங்க முகாமையாளராகவும், சமாதான நீதிவானாகவும் கூட சில காலம் செயல்ப்பட்டார்.
இவர் தமிழ் தவிர சமஸ்கிருத, ஆங்கில மொழிகளில் ஈடுபாடு உள்ளவர்.
தனது பணிக்கால ஒய்வின் பின்னர் கடல் வழியாக தமிழ்நாடு வந்து இராமேஸ்வரம் இராமணாத சுவாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு இவருக்கு இயல்பாக கிட்டியது !
இதன்பின்னர், இந்தியாவில் உள்ள சிவத்தலங்களைத் தேடி பயணமானார்.
வாரணாசி, காசி, திருவண்ணாமலை போண்ற ஊர்களில் சிவ சிந்தனையோடு ஒண்றிச் சிலகாலம் வாழ்ந்திருக்கிறார்.
பின்னர் சீனா ஊடாக ரிஷிகேசம் பசுபதி நாத் காட்மண்டு நேபாளம் என்று திருக்கைலாயம் சென்றடைந்துள்ளார்.
அங்கு, கெளரிகுண்டு மானசரோவர் தீர்த்தங்களாடி தவ அனுஸ்ட்டானங்களிலும் யோகாசன முயற்சிகளிலும் சில காலம் ஈடுபட்டுள்ளார்.
இதன்பின்னர் மீண்டும் திருவண்ணாமலையிலே சுவாமி அவர்கள் காணப்படுகிறார்.
திருமூலச்சித்தர், காமாட்டசி சுவாமிகள் எனப் பல இறை நாமங்களால் திருவண்ணாமலையிலே அண்ணாமலை நேசர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.
இவர் இங்கு ஒரு "Advisary Board" அதாவது நல் ஆலோசனைகளை
வழங்க வல்ல நல்ல அண்ணாமலை நேசர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார்.
இவர்களில் எஞ்சினியர் உயர்திரு. R.லோகநாதன் அவர்கள், உயர்திரு. V.கணேசன் BA அவர்கள், மாவட்ட வைத்திய ஆலோசகர் உயர்திரு K.தட்சனாமூர்த்தி அவர்கள் மற்றும் அட்வகேட் சட்ட ஆலோசகர் உயர்திரு C.ஏழுமலை அவர்கள் போண்றோரை குறிப்பிடலாம்.
மேலும் வெ.சிற்றரசு அவர்கள், க.ரமேஷ் அவர்கள், கா.கபூர் அவர்கள், த.தெய்வேந்திரன் அவர்கள் போண்ற அன்பர்களும் இவருடன் நீண்ட காலம் ஆன்மீக ஈடுபாடு கொண்டுள்ளனர்.
நிணைத்தாலே முத்தி தரும் சிவபூமியிலே தவம், தியானம், மற்றும் யோகாசன உடல் மன பயிற்சிகளில் தான் இடுபடுவதோடு மற்றவர்களையும் ஈடுபடுத்தி இன்பம் காண்கிறார்.
வெளி ஊர்களில் இருந்து வரும் சிவ பக்தர்களின் அன்னதான முயற்சிகளுக்கும்
காசி, இராமேஸ்வரம், திருக்கையிலாம் போண்ற சிவதரிசன யாத்திரைகளில் ஈடுபட நாட்டம் கொண்ட இறை அருளாளர்களுக்கும் ஆலோசனைகள் தந்து வழிகாட்டுகிறார்.
ஆன்மீக நடமாட்டங்களின் இடையே இவரது ஓய்வு நேரங்களைத் தெரிந்துகொண்டு 9443492479 அல்லது 9442810106 எண்ற ஏதாவது ஒரு இலக்கத்தில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இவருடன் பேசி எவரும் தங்கள் ஆன்மீக நோக்கங்களை நிறைவு செய்யலாம்.

தவம், தியானம், யோகாசன பயிற்சிகளை பெற விரும்புகின்றவர்கள், அன்னதான நோக்கங்களை சிறப்பாக நிறைவேற்றிக்கொள்ள விரும்புகின்றவர்கள், திருத்தல, திருக்கைலாய யாத்திரைகளில் சித்தம் கொண்டவர்கள் அதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் இவரது தெய்வீக அனுபவங்களோடு கேட்டு தெரிந்து பயனடையலாம்.
இன்பமே சூழ்க ! எல்லோரு வாழ்க !!
மேன்மை கொள்சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் !
நண்றி வணக்கம் !
அன்புடன் அச்சரன் சுபாஸ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
0 Responses to “ஆன்மீக சேவா அறக்கட்டளை திருவண்ணாமலை ஈழத்துசித்தர்”
கருத்துரையிடுக