ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
பாரதியார் Barathiyar
Do you like this story?

.jpg)
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், (Thirunelveli) பிறந்த பாரதியார் இளம் வயதில் “சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்.
தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.
பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டார். 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
.jpg)
சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

![]() |
பாரதியின் காதல்க் கண்ணம்மா |

இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
திறந்தவெளிக் கலையரங்கம் ஒண்றும் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
பி.கு;- பாரதியார் பற்றிய தகவல்கள் ஒலிப் பதிவுகள் தங்களிடம் இருந்து தகவலைப் பங்கிட மனசும் இருந்தால் தயவுசெய்து உடனடியாக இங்கே இணைத்துவிடுங்கள் ! மனசு மாறக்கூடியது, மாறிவிடப்போகிறது !!!
’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’
இந்த வார்த்தைகள் பற்றி.... எங்கள் வருங்காலங்களும் சிந்திக்கட்டும் ! நண்றி.
![]() |
பாரதியார் பிறந்த வீட்டில் அவருக்கு ஒரு சிலை |
![]() |
பூநூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் |
![]() |
பாரதியின் கூட இருந்த குவளைக்கண்ணன் |
![]() |
பாடல்களை பதிப்பித்த நெல்லையப்பர் |

This post was written by: Franklin Manuel
Franklin Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 Responses to “பாரதியார் Barathiyar”
கருத்துரையிடுக