ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கவியரசு கண்ணதாசன் Kannathasan


அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி ஒண்று !

 

1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு பூரண அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.



கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டதாக தெரியவருகிறது. அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்திருக்கிறார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியிலுமாக எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் கம்பனியில் பணியில் சேர்ந்தார்.

கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012), கண்மணி, சுப்பு உள்ளிட்ட 3 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம் உள்ளிட்ட 3 மகள்களும் உள்ளனர். பின்னர் பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி.
கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர். அவர் நிரந்தரமானவர், அவர் நினைவுகள் என்றும் அழிவதில்லை.



அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி இரண்டு !


அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி மூண்று !




1 Responses to “கவியரசு கண்ணதாசன் Kannathasan”

pathenajaey சொன்னது…
4 மார்ச், 2022 அன்று 4:26 PM

Harrah's Las Vegas Casino & Hotel - JT Hub
Harrah's Las Vegas 제천 출장마사지 Casino & Hotel is set 1.7 miles 안산 출장샵 from McCarran International Airport. The 구리 출장마사지 3,000 room hotel, which 전주 출장안마 is located on the 용인 출장안마 second level


கருத்துரையிடுக