ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

திருவள்ளுவர் Thiruvalluvar


பிறப்பு : தெரியாது.
இறப்பு : தெரியாது.







ஐயன் திருவள்ளுவரின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி எழுதக்கூடிய அழவிற்கு  சான்றுகள் எதுவுமே கிடைக்கவில்லை !
என்றாலும் அவர் பிறந்த காலம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு குத்துமதிப்பாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதன் படி கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.  தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு
தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.


அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று  சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும், நெசவுத் தொளிலில் ஈடுபட்டிருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனாலும் இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.வள்ளுவரின் தோற்றமும் கூட ஒரு கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் கூட சான்றுகள் இல்லை !

கடைசியாக இருந்த தமிழ்ச்சங்கம் (கடைச்சங்கம்) கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது . அப்போதுதான் திருக்குறள்,
புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டதாக தெரியவருகிறது. அச் சமயம் மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் திட்மிட்டு அழிக்கப்பட்டுள்ளன !! அல்லது மறைக்கப்பட்டுள்ளன!!

மேலும், மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். ஆனால் அங்கிருந்த புலவர்கள் அவருக்கு சரியான அங்கீகாரத்தினை வழங்கவில்லை. அதை எதிர்த்து வள்ளுவனார்  தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை அல்லது அவர்களது ஆக்கங்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம். இக்கதையை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது கற்பனையானது எண்றே கொள்ளுவோம். ஆனால்………………………………….

வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த பலரைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி மட்டும் எதுவும் இல்லாமல் இருப்பது மிக்க ஆச்சரியமாகவும், அதேவேளை  வேதனையாகவும் உள்ளது. எவ்வாறு எனினும் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் அல்லது அக்கால அதிகார வர்க்கத்திற்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது !

ஏன் என்றால் திருவள்ளுவர் ஒரு தொன்மையான தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கிறார். அவர், கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை ! சாதி, மத,மொழி பிரிவினையகளையும், தான் உயிர் வாழ பிற விலங்குகளை புசித்து உயிர் வாழ்வதையும் அவர் வெறுத்திருக்கிறார். விலங்குகளைப் பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்திருக்கிறார். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். எல்லோரையும் கல்வி கற்கும்படி வலியுறுத்துகிறார். அவர் இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.இவை சார்ந்த கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை என கற்ரோர்களால் போற்றப்படுகிறது.
ஆனால்…………… திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த யாரோ சிலருக்கு இவருடைய இக் கருத்துக்கள் பிடிக்கவில்லை ! எனவே தான் திருவள்ளுவரையும் அவரைப்பற்றிய குறிப்புகளையும் திட்டமிட்டு மறைத்துள்ளனர். என்றாலும் அவர்களால் திருக்குறளின் பிரகாச வெள்ளத்தை மறைக்கவே முடியவில்லை !

இதனைச் சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’ எனும் நூலில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”

சாதி, மத, மொழி சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெற்றுவிடக் கூடாது என்று ரிக், யசூர்,
சாம, அதர்வணம் என்கிற நூல்களை அதாவது வேதங்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால்
வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக, அல்லது அவற்றுக்கு சமமாக அல்லது அவற்றை விட சிறந்த  மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச்
சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.
இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது,
ஒரு சமூக சீர்த்திருத்த அறிஞராக, எக் காலமும் எம்மோடு கலந்து வாழும் ஒரு சித்த ஆத்மாவாக, ஞான குருவாக எம் மனதில் ஆன்மார்த்தமாக, அழுத்தமாகப் பதிந்து விடுகின்ற இந்த செந்நா போதகரை என்நாளும் வாழ்த்துவோம் !! வணங்குவோம் !!



பி.கு ;-

படங்கள்;-
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள திருவள்ளுவர் காசுகளின் முன் பின் பக்கங்கள் !
மைலாப்பூரில் கிடைத்த திருவள்ளுவர் சிலை !
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை !

திருவள்ளுவர் குறித்து யாரேனும் பயனுள்ளதாக ஏதேனும் சொல்லுங்கள் ! இங்கே எழுதுங்கள் !! நன்றி. அன்புடன் அச்சரன் சுபாஸ்

0 Responses to “திருவள்ளுவர் Thiruvalluvar”

கருத்துரையிடுக